குவியும் குப்பைகளால் மக்கள் அவதி

Update: 2026-08-23 13:28 GMT

பென்னாகரம் மின்வாரிய அலுவலகத்தின் முன்பு பென்னாகரம்-தர்மபுரி பிரதான சாலையில், தினமும் மலை போல் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் மூக்கைப்பிடித்த படி கடந்து செல்கின்றனர். நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அள்ளவும், அங்கு குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்