சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர் பகுதியில் குப்பைகள் முறையாக அள்ளாததால் சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றத்தால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும் இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.