சாலையோரம் குவியும் குப்பை

Update: 2026-08-23 16:03 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை அடுத்த சுந்தராஜபுரம் மார்க்கெட் நுழைவு பகுதியின் அருகே சாலையோரம் குப்பைகள்மற்றும் காய்கறி கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகின்றது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இரவு ரேங்களில் இதை உண்ண வரும் கால்நடைகள் சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மார்க்கெட் அருகே குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்