ஆரணி காந்தி நகரில் இருந்து பாரதியார் தெரு செல்லும் சாலையில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முறையாகக் குப்பைகளை அள்ளாததால் சாலைகளில் எங்குப் பார்த்தாலும் குப்பைக்கூலமாகக் காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும்.
-மாரிமுத்து, ஆரணி.