கீழ்பென்னாத்தூரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள ஒரு பெட்ரோல் பங்க் எதிரே புளியமரம் உள்ளது. அதன் அருகில் பேரூராட்சி பணியாளர்கள் குப்பைகளை சேகரித்துக் கொண்டு வந்து கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் புளிய மரத்தின் அடிபகுதி எரிந்து நாசமாகி விட்டது. அந்த மரம் எந்த நேரத்திலும் கீழே விழலாம். புளியமரத்தின் அருகில் குப்பைகளை எரிப்பதை கைவிட வேண்டும். புளியமரம் ஆபத்தான நிலையில் இருந்தால் அகற்றலாம்.
-டி.சீனுவாசன், சிறுநாத்தூர்.