போளூர் பேரூராட்சி சனிக்கவாடி சாலை ரெயில்வே கேட் அருகில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதை, பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை. குப்பைகளை அகற்ற வேண்டும், மேலும் குப்பைகளை கொட்டக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழன்பாபு, போளூர்.