போளூர் தொகுதிக்கு உட்பட்ட இரண்டேரிப்பட்டு சுசி நகர் பகுதியில் ஒரு மண்டபத்தின் பின்பக்கம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் மேலே உள்ள விளை நிலங்களில் இருந்து மழை நீர் வெளியேற வழியில்லாததால் தேங்கி நிற்கிறது. மேலும் மழைநீர் தேங்கி நிற்க காரணமாக ஏரி கால்வாய்கள் தூர்ந்துபோய் அடைபட்டுள்ளதால், மழை நீர் ஏரிக்கு செல்ல வாய்ப்பில்லை. ஆகவே ஏரிக்கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஜித்குமார், போளூர்.