திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் கிராமத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது. அதன் அருகில் மேல்நிலைப் பள்ளி, கோவில், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிறுத்தம் ஆகியவைகள் உள்ளன. அந்தக் கிடங்கில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எந்த நேரமும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைக்கிடங்கை முறையாகப் பராமரிக்காமல் உள்ளனர். அடிக்கடி குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை மக்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம் குப்பைக்கிடங்கை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்வாணன், பூங்குளம்.