ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் கோவிந்தச்சேரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய பாலகிருஷ்ணாபுரம் ஏரி தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் வளர்ந்துள்ள முட்புதர்கள் அகற்றப்படுமா என கடந்த 14-ந் தேதி தேதி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியியப்பட்டது. இதனை தொடர்ந்து முள் செடிகள் உடனடியாக அகற்றப்பட்டது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்..