குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-03-03 17:50 GMT

வாலாஜா 16-வது வார்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்பக்கம் ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதனுடன் மாட்டுச்சாணமும் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கு காய்ச்சல் வந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. குப்பைகளை சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வி.ஹேமபிரியா, வாலாஜா. 

மேலும் செய்திகள்