திருச்சி மாவட்டம், முசிறியில் கொளக்குடி முதல் தும்பலம் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.