குடியாத்தத்தை அடுத்த செட்டிக்குப்பம், மேல்பட்டி சாலையில் கால்வாயின் ஓரம், குப்பைகளோடு பிளாஸ்டிக் கழிவுகளை கலந்து எரிக்கப்படுகிறது. இதில் இருந்து வரும் புகையால் அந்த வழியே செல்பவர்கள் மற்றும் கிராம மக்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. புகை மண்டலமாக இருப்பதால் வாகன ஓட்டிகளின் பார்வை மறைக்கப்பட்டு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.