உடுமலை ரெயில் பாதையை ஒட்டிய சாலை மற்றும் பழனியாண்டவர் மில்லை ஒட்டிய சாலையின் நடுவில் குப்பை மூட்டைகளை வீசி சென்று விடுகிறார்கள். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.