விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதி சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றத்தால் சாலையில் பயணிக்கும் பாதசாரிகள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.