குப்பைகள் அகற்றப்பட்டது

Update: 2026-08-30 12:52 GMT

தேங்காப்பட்டணம் பகுதியில் ஆற்றுப்பள்ளி தெரு உள்ளது. இந்த பகுதியில் இருந்து துறைமுகத்துக்கு செல்லும் பாதையில் சிலர் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டினர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றத்துடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

-பீர் முகம்மது,தேங்காப்பட்டணம்.

மேலும் செய்திகள்