சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இதில் எழும் துர்நாற்றத்தால் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் குப்பைகளால் அப்பகுதி சுகாதார சீர்கேடுடன் காட்சியளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகள் தேங்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமா?