மதுரை 72-வது வார்டு பொன்மேனி- மாடக்குளம் மெயின் சாலையில் உள்ள 2-வது மயானம் அருகே குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்குமா?