சுகாதார சீர்கேடு

Update: 2026-05-31 10:15 GMT

உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அத்துடன் குப்பைகள் முறையாக சேகரிக்கப்படுவது இல்லை. இதனால் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அவை குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு குப்பைகளை அகற்றவும், கால்வாயை தூர்வாரவும் அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்