குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-05-24 09:56 GMT

கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் அருகில் குப்பை முறையாக அல்லாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுற்றுச்சுசூழல் மாசு ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் பயங்கரமான துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், மூக்கை பிடித்தப்படி செல்லும் நிலை உள்ளது. இதேபோல், கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு குப்பையை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், கணக்கம்பாளையம்.

மேலும் செய்திகள்