டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

Update: 2026-05-24 10:45 GMT

கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பகுதிகளில் ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மற்றும் புன்னம் சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவ கழிவுகளை சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையின் காரணமாக குப்பைக்கழிவுகளில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்