கோவை அருகே காளம்பாளையத்தில் இருந்து நொய்யல் ஆற்றுக்கு செல்லும் சாலை பிரிகிறது. இந்த சாலையோரத்தில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. சிலர் அந்த குப்பைகளுக்கு தீ வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், மீண்டும் குப்பைகளை கொட்டாமல் தடுக்கவும் அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.