தேங்கும் குப்பைகள்

Update: 2026-05-03 13:17 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ் நிலையத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலை அருகில் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகள் அள்ளப்படாததால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளன. இதேபோல சூளகிரி நகரில் பல இடங்களில் குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே குப்பைகளை நாள்தோறும் அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்