மலை போல் குவிந்த குப்பைகள்

Update: 2026-05-03 10:17 GMT

பேரூர் செட்டிபாளையம் அருகே குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. அங்கு மலை போல் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகிறார்கள். நீண்ட நாட்களாக அங்கு குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே அங்கு குவித்து வைக்கப்பட்டு உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்