பூங்காவில் குப்பை கொட்டலாமா?

Update: 2026-04-26 13:30 GMT

தர்மபுரி ரெயில் நிலைய நுழைவுவாயில் அருகே தொடங்கும் மரப்பூங்கா தர்மபுரி-சேலம் சாலை இணையும் பகுதியில் முடிவடைகிறது. ரெயில் நிலையத்திற்கு செல்லும் இருவழி சாலையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த மரப்பூங்காவில் குப்பைகள், கழிவுப்பொருட்கள் அதிக அளவில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் சுற்றுச்சூழலும் மாசுபாடு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தர்மபுரி ரெயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்த மரப்பூங்காவை சீரமைக்கவும், இங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்