சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் குப்பைகளால் அப்பகுதி சுகாதார சீர்கேடுடன் காட்சியளிக்கிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?