அரியலூர் நகரின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாக சித்தேரி உள்ளது. இந்த சித்தேரி கரையில் திருச்சி-அரியலூர் சாலையோரம் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகள் சாலை முழுவதும் பரவி கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியே குப்பைக்கூழமாக மாறி வருகிறது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.