திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்நிலையில், சுகாதார நிலையத்தை ஒட்டியுள்ள சாலையோரத்தில், இறைச்சி கழிவுகள், மீன்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் அந்த கழிவுகள் உடனயாக அகற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.