திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் அமைந்துள்ள 2-வது பிரதான சாலை ஓரங்களில், மலைபோல குப்பைகளும் கழிவுகளும் குவிந்து காணப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மாடுகளும் சாப்பிட எதாவது கிடைக்குமா? என்று கழிவுகளை அங்கும் இங்கும் புரட்டுவதால், சாலைகள் குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது. குப்பைகள் அகற்றப்பட இதுதொடர்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.