விருதுநகரில் இருந்து பேராலி கிரமத்திற்கு செல்லும் சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பை அகற்றப்படுமா?