நோய் பரவும் அபாயம்

Update: 2025-12-07 12:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்கள் பாம்பாற்றில் கொட்டுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மாசு அடைகிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இனிவரும் நாட்களில் குப்பை கழிவுகளை ஆற்றில் கொட்டாமல் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நாடார் கொட்டாய் புளியந்தோப்பில் குப்பை கிடங்கில் கொட்டுமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்