சுகாதார சீர்கேடு

Update: 2025-12-07 10:17 GMT

பேச்சிப்பாறை அணையில் திறக்கப்படும் தண்ணீர் இரணியல் கிளை கால்வாய் வழியாக மேக்காமண்டபம், திருவிதாங்கோடு வழியாக பாய்கிறது. இந்த கால்வாய்களில் சிலர் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டிகள், இறந்த நாய், கோழிகள் மற்றும் இறைச்சி கழிவுகளையும் கொட்டுகின்றனர். இதனால் அவை தண்ணீரில் அடித்து வரப்பட்டு திங்கள்சந்தை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலத்தடுப்புகளில் தேங்கி காணப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன், தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கும் தொற்நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயில் குப்பைகள் வீசுவதை தடுக்க அதன் கரையோரத்தில் அந்தந்த பேரூராட்சிகள் மூலம் தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வர்கீஸ் மரியான், திங்கள்சந்தை.

மேலும் செய்திகள்