திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலை ஏரிக்கரை சாலையோரமாக மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களுக்கு பலவிதமான தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.