சுகாதார சீர்கேடு

Update: 2025-11-02 11:55 GMT

ஏரியூர் அருகே உள்ள கூர்க்காம்பட்டியில் பிரதான சாலையோரம் மலைபோல குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக குப்பைகள் அள்ளாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அதிகப்படியான கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. உடனடியாக இந்த குப்பைகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாற்று இடத்தில் குப்பைகளை கொட்ட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

-தெய்வம், ஏரியூர்.

மேலும் செய்திகள்