ஏரியூர்-மேச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள ஓடையை ஆக்கிரமித்து ஏராளமான கட்டிட கழிவுகளும், குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதன் காரணமாக ஓடையில் செல்ல வேண்டிய நீர் சாலையில் நிரம்பி ஓடுகிறது. இதனால் தார் சாலையும், தரைப்பாலமும் சேதமடைகிறது. எனவே இந்த நீர் வழிப்பாதைகளை சீரமைக்க வேண்டும். கட்டிட கழிவுகளை மாற்று இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வள்ளி, செல்லமுடி.