தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2025-11-02 10:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம் 11-வது வார்டு இந்திராநகர் பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்