பல்லடம் அருகே பணிக்கம்பட்டி ஊராட்சி எலந்தகுட்டையில் குப்பைகளும், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மாசடைகிறது. இந்த குட்டையில் தேங்கும் தண்ணீரை கால்நடைகள் குடிக்கும்போது அவை பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே குட்டையில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.