கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி மின்னாம்பள்ளி ஊராட்சி அரசு காலனி வாட்டர்டேங்க் மெயின் சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் சாலையில் 20 அடி தூரத்திற்கு பரவி உள்ளது. கடந்த 3 மாதங்களாக இந்த கழிவுகள் அகற்றப்படவில்லை. மழை நேரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.