குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2025-10-26 11:52 GMT

கோவையை அடுத்த காருண்யா நகர் சிறுவாணி மெயின் சாலைேயாரத்தில் பிளாஸ்டிக் கவர்களில் குப்பைகள் உள்ளிட்ட கழிவுகளை கட்டிக்கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். அவற்றை அந்த வழியாக மேய்ச்சலுக்கு வரும் ஆடுகள், மாடுகள், கழுதைகள் தின்கின்றன. இதனால் அவைகளின் உடல் நலன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் குப்பைகள் கொட்டப்படுவதால் சாலையோரத்தில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். மீண்டும் குப்பைகள் கொட்டப்படாமல் அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்