அரியலூர் நகரில் உள்ள ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் அப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். அந்த குப்பைகளை தெருநாய்கள் மற்றும் பன்றிகள் கிளறுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் குப்பைகள் சேருவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.