அகற்றப்படாத மருத்துவக்கழிவுகள்

Update: 2025-10-19 12:13 GMT

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் மருந்துகளின் மருத்துவக் கழிவுகளை மருத்துவமனையின் வளாகத்திலேயே கூட்டி சேகரித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்