சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தின் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் வாகனங்கள் நிறுத்துமிடத்தின் அருகில் உள்ள பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகள் ஆக்கிரமித்து பல மாதங்களாக அகற்றப்படாமல் பொதுமக்களுக்கு இடையூராக இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து துரித நடவடிக்கையாக அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற ‘தினத்தந்தி‘ பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.