‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-10-12 11:33 GMT

பெரம்பலூர் வட்டம் செங்குணம் அண்ணா நகர் தெற்கு பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் வகையில் சாலையோரம் குப்பைத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டி நிரம்பியதால் குப்பைகள் கீழே விழுந்து கிடந்த நிலையில், குப்பைகள் அப்புறப்படுத்தாமல் உள்ளதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்தினர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்