ராமநாதபுரம் மாவட்டம் அல்லிகண்மாய் மயானகரை, பாப்பாகுடி, கவரங்குளம் செல்லும் சாலையோரங்களில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். குவிந்து கிடக்கும் இந்த குப்பைகளை நாய் மற்றும் பன்றிகள் கிளறி செல்வதால் குப்பைகள் சாலையில் பரவி கடும் துர்நாற்றும் வீசுகிறது. மேலும் இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும், அப்பகுதியில் குப்பை தொட்டி வைத்து பராமரிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?