எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2025-10-12 08:09 GMT

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் ,புள்ளி லைன் 2-வது பிரதான சாலையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இந்த மின்கம்பத்தால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளார்கள். மேலும் அந்த வழியாக பள்ளி செல்லும் குழந்தைகளும், பொதுமக்களும் பயத்துடனே அந்த பகுதியை கடக்கும் அவலநிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்து காணப்படும் இந்த மின்கம்பத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்