சென்னை பல்லாவரம் 6-வது வார்டு சீனிவாச பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இத்தகு சிறப்புமிக்க கோவிலின் எதிரில் பல நாட்களாக குப்பைகள் தேங்கி அலங்கோலமாக கிடக்கிறது. பயங்கர துர்நாற்றம், எலிகள் நடமாட்டம், கொசுக்கள் உற்பத்தி போன்றவற்றால் இங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கும் சாமி தரிசிக்க வருபவர்களுக்கும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் இங்கு தேக்கிவைக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக வழிவகை செய்யவேண்டும்.