சென்னை கொளத்தூர் மாதங்குப்பம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குடியிருப்புகளின் குப்பைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் 4 குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து ஏற்படும் பயங்கர துர்நாற்றம் குடியிருப்புவாசிகளை வீட்டிற்குள்ளேயை அடக்கியுள்ளது. மேலும் அவைகளில் இருந்து கீழே கிடக்கும் கழிவுகள் தொற்று நோய்க்கும் வழி வகுக்கிறது. குடியிருப்புவாசிகளுக்கு இடையூராக உள்ள இந்த குப்பை தொட்டிகளை மாற்று இடத்தில் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.