சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் குடியிருப்பு பகுதிக்கு பின்புறமாக மலை போல குப்பைகள் தேக்கமடைந்து சுற்றுப்புறத்துக்கு கேடுவிளைவிக்கும் வகையில் கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பயங்கர துர்நாற்றமும், தொற்றுநோய் ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக் குப்பைகளே அதிகமாக பரவி கிடப்பதால் மண்வளமும் அழியும் அவலம் உள்ளது. நோய்தொற்றினால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுவதற்கு முன்பாக இந்த குப்பைகளை அகற்றிட உடனடி நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.