காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், அகரம் கிராமத்தில் அரசினர் ஆதி திராவிடர்நல பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவ,மாணவிகள் படித்து வருகிறார்கள். 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் உள்ள இந்த பகுதியில் குப்பைகளை அங்குள்ள குப்பை தொட்டிகளில் சேகரித்து தினமும் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் காற்று மாசடைவதோடு, பொதுமக்களும் சிரமப்படுகிறார்கள். மேலும் மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தினமும் தேங்கும் குப்பைகளை அங்கிருந்து அகற்றி உரிய கழிவுமேலாண்மையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.