மதுரை ஆரப்பாளையம் முதல் வண்டியூர் வரை உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் குப்பைகளை வைகை ஆற்றில் கொட்டி செல்கின்றனர். இதனால் வைகை ஆறு முற்றிலுமாக மாசடைவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட ஆற்று பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை முற்றிலுமாக அகற்றவும், குப்பைகள் கொட்டாமல் இருக்க அப்பகுதியில் கூடுதல் குப்பைத்தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்குமா?