விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சங்கரன்கோவில் சாலையில் சத்திரப்பட்டி விலக்கு பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை உள்ள கழிவு நீர் ஓடையில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?